சென்னை விடுதியில் சாவி துவாரம் வழியாக ஊழியர்கள் கண்ட அந்த அதிர்ச்சி! நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!!
சென்னை பெரியமேட்டில் விடுதியில் இளைஞர்-இளம்பெண் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிப்பு; காதல், குடும்ப பிரச்சினைகள் பின்னணி என போலீஸ் விசாரணை தீவிரம்.
சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு விடுதியில் இளைஞர், இளம்பெண் இருவரும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் பின்னணியில் ஏற்பட்ட தகராறு இந்த மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காதல், குடும்ப எதிர்ப்பு…..
தகவலின்படி, ராமபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பாரதி பெருமாளும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி பவ்யாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சாதி காரணமாக திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால், பவ்யாவுக்கு வேறு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமண வாழ்க்கை நீடிக்காத நிலையில், அவர் மீண்டும் சென்னைக்கு வந்து படிப்பைத் தொடர்ந்துள்ளார். இதனால் பழைய தொடர்பு மீண்டும் ஆரம்பமானதாக கூறப்படுகிறது.
விடுதியில் நடந்த அதிர்ச்சி
இதையடுத்து, கடந்த 23ஆம் தேதி பெரியமேடு குமரப்பா தெருவில் உள்ள விடுதியில் இருவரும் தங்கியுள்ளனர். நேற்று காலை அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் சாவி துவாரத்தின் வழியாகப் பார்த்தபோது பவ்யா கழுத்தில் காயத்துடன் படுத்தும், பாரதி பெருமாள் தூக்கில் தொங்கியும் இருந்தது தெரியவந்தது. உடனே தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வந்து கதவை உடைத்து இருவரின் உடல்களையும் மீட்டனர்.
முதற்கட்ட விசாரணை தகவல்
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பவ்யாவிற்கு எலி மருந்து கொடுத்து மயக்கமடையச் செய்து, பின்னர் தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன்பின் பாரதி பெருமாள் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து எலி மருந்து பாட்டில் மற்றும் பிளேடு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த பெரியமேடு காதல் மரணம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!