×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிறுபான்மையினர் பேனர் வைக்க முயன்ற திமுக மாவட்டத்தை மிரளவிட்ட பெண் கவுன்சிலரின் கணவர்.! சென்னையில் பகீர் சம்பவம்..!

சிறுபான்மையினர் பேனர் வைக்க முயன்ற திமுக மாவட்டத்தை மிரளவிட்ட பெண் கவுன்சிலரின் கணவர்.! சென்னையில் பகீர் சம்பவம்..!

Advertisement

 

சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் தமிமுன் அன்சாரி. திமுக சிறுபான்மை அணியின் வடசென்னை மாவட்ட தலைவராக பதவி வகிக்கிறார். 

இவருக்கு ஆதரவாக அக்கட்சியின் சிறுபான்மை அணியினர் பேனர் வைக்க சென்றபோது, அங்கு வந்த திமுக பெண் கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் தமிமுன் அன்சாரியை அவதூறாக பேசி இருக்கிறார். 

மேலும், தகாத வார்த்தையால் திட்டி, மத ரீதியாகவும் அவதூறு பேசியுள்ளனர். பேனர் வைத்தால் கொளுத்துவோம் எனவும் மிரட்டியுள்ளனர். 

இதனால் அதிர்ந்துபோன தமிமுன் அன்சாரி, ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ராயபுரம் 51 வது வார்டு கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஜெகதீசனின் மீது மாமூல் கேட்டது, காவல் அதிகாரிகளை மிரட்டியது போன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Palaya Vannarpet #dmk #politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story