நாங்கள் இனி இருக்கு மாட்டோம்..... மகனுக்கு தந்தை அனுப்பிய மெசேஜ்! அடுத்தடுத்து கணவன் செய்த பயங்கரம்! நடுங்க வைக்கும் பின்னணி.!!!
சென்னை நங்கநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவன், பின்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நங்கநல்லூரில் குடும்பத் தகராறு விபரீதமாக முடிந்தது. மனைவியை அரிவாளால் கொலை செய்த கணவன், பின்னர் தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். தில்லை கங்கா நகர் பகுதியில் நடந்த இந்த இரட்டை மரணம் அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நீண்டநாள் தகராறு… பணச்சிக்கல் பின்னணி
தில்லை கங்கா நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52) வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி நாகலட்சுமி (42), பட்டுப்புடவை வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இரு மகன்களும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படித்து வரும் நிலையில், வீட்டில் பணச் சுமை அதிகரித்தது. தகவலின்படி, கணவனின் பொறுப்பற்ற நடத்தை மற்றும் பண விவகாரம் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளியில் மகனால் தேர்வு எழுத முடியாது! மன உளைச்சலில் தாய் எடுத்த விபரீதமான முடிவு! வீட்டுக்கு வந்த கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
ஆத்திரத்தில் கொலை… அதன்பின் அதிர்ச்சி முடிவு
நேற்று மதியம் மீண்டும் வாக்குவாதம் தீவிரமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் வெளியே சென்று அரிவாள் வாங்கி வந்து, மனைவி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் நாகலட்சுமி உயிரிழந்தார். அதன்பின், கல்லூரியில் இருந்த மகனுக்கு “நாங்கள் இனி இருக்க மாட்டோம்” என்று குறுந்தகவல் அனுப்பியுள்ளார். பின்னர், மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகனின் அதிர்ச்சி… போலீஸ் விசாரணை
வீட்டிற்கு வந்த மகன், தாய் ரத்தத்தில் கிடப்பதையும் தந்தை உயிரிழந்திருப்பதையும் கண்டு திகைத்தார். தகவல் கிடைத்ததும் ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், கடன் சுமை மற்றும் குடும்ப அழுத்தம் இந்த குடும்பத் தகராறு விபரீதமாக மாறியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: திருமணம் செய்யாமல் 10 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்த கள்ளக்காதலர்கள்! திடீரென உண்டான சந்தேகம்! அடுத்தடுத்து நடந்த பயங்கரம்!