×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாழைப்பழ பேச்சு, திமிர் வாக்குமூலம்.. 20 பெண்களை ஏமாற்றிய கயவன்.. அதிர்ந்துபோன அதிகாரிகள்.!

வாழைப்பழ பேச்சு, திமிர் வாக்குமூலம்.. 20 பெண்களை ஏமாற்றிய கயவன்.. அதிர்ந்துபோன அதிகாரிகள்.!

Advertisement

20 க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றிய காமுகன், காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்த 3 மாடல் அழகிகள், தங்களுக்கு நேர்ந்த துயரம் குறித்து கண்ணீர்மல்க புகார் அளித்தனர். இந்த புகாரில், "எங்களுடன் விளம்பரத்தில் நடித்த மாடலிங், எங்களை காதலிப்பதாக கூறி, திருமணம் செய்வதகுக உல்லாசமாக இருந்து இலட்சக்கணக்கில் பணம் பறித்து கைவிட்டுவிட்டார். 

அவருடன் நெருக்கமாக இருந்த சமயங்களை எங்களுக்கே தெரியாமல் ரகசிய கேமிராவில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டுகிறார். இதனால் பெற்றோருக்கு தெரிந்துவிடும் என எண்ணி, அதனை வெளியே சொல்லாமல் நாங்கள் இருந்துவிட்டோம். நாங்கள் 3 பேரும் ஒருவரையொருவர் சந்தித்தபோது அவரால் நாங்கள் ஏமாற்றப்பட்டது உறுதியானது. மேலும், எங்களைப்போல பல பெண்களும் விளக்கில் சிக்கிய விட்டில் பூச்சியாய் தவிக்கிறார்கள். எங்களையும், பாதிக்கப்பட்ட பெண்களையும் காப்பாற்றுங்கள்" என்று தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் ரகசிய விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில், வேப்பேரி உதவி ஆணையர் அரிகுமார், வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலா தலைமையிலான தனிப்படை குழு விசாரணையில் இறங்கியது.

விசாரணையில், மாடலிங் துறையை சேர்ந்த முகம்மது செய்யது (வயது 26) கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலையில் வசித்து வரும் பி.காம் பட்டதாரி மும்மது செய்யது, பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவரின் மீது கற்பழிப்பு, நம்பிக்கை மோசடி, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.அவனிடம் நடந்த விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவலை எந்தவித குற்றஉணர்ச்சியும் இன்றி தெரிவித்து அதிகாரிகளையே அதிரவைத்துள்ளான். 

அவனது வாக்குமூலத்தில், "நான் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். இப்போதும் குடும்பத்தோடு இருக்கிறேன். இளம் வயதில் இருந்தே நான் அழகாக இருப்பதால், பள்ளிக்கூட பருவத்திலேயே எனது காதல் விளையாட்டு தொடங்கியது. பள்ளிப்பருவத்திலேயே பெண்களிடம் பேசி, ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டேன். பின்னர், கல்லூரி படிப்பு முடிந்ததும் திடகாத்திரமான உடல் இருந்ததால் மாடலிங் தொழிலுக்கு வந்தேன். 

அப்போது, பெண்களிடம் பழக வாய்ப்புகள் அதிகளவு கிடைத்தது. அவர்களிடம் திரைப்பட பாணியில் கண்டதும் காதல் பெயரில் கதையை அளந்து விடுவேன். அவர்கள் என்னை நம்பும் அளவு நல்லவன் போல பேசுவேன். எனது பேச்சையும், அழகையும் கண்டு பெண்கள் மயங்கியதும், காதலில் வீழ்த்தி படுக்கைக்கு அழைத்து செல்வேன். அவர்களிடம் செலவுக்கு என பணம் கேட்பேன். அவர்களும் என்னை திருமணம் செய்வான் என்ற நம்பிக்கையில் உடலையும் தந்து பணத்தையும் தருவார்கள்.

இவ்வாறாக பின்னாளில் இதுவே என் பிழைப்பு ஆனது. கடந்த 5 வருடமாக பல பெண்களிடம் அத்துமீறி இருக்கிறேன். இதில் வாட்சப், வீடியோ, தகவல் பரிமாற்றம் என மோசடி வாழ்க்கைக்கு தொழில்நுட்பமும் பேருதவி செய்தது. பெண்களுடன் தனிமையில் இருந்ததை புகைப்படம் எடுத்து தேதி வாரியாக தனித்தனியே சேமித்தும் வைத்துள்ளேன். நீங்கள் (காவல்துறையினர்) கொடுத்த பட்டியல் என்னால் பதிவு செய்யப்பட்டது. கணக்கில் வராதவை நிறைய உள்ளது. 

சில பெண்கள் திருமண வார்த்தை கூறினாலும் படுக்கைக்கு சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள். அவர்களை வீழ்த்த போலியாக தாலி கட்டி உல்லாசமாக இருந்து, சில நாட்களில் கைவிட்டு செல்வேன். கடந்த 5 வருடமாக மன்மதனாக வாழ்ந்து வந்தேன். இப்போதுதான் எனது உல்லாச வழக்கிற்கு சட்ட சிக்கல் வந்துள்ளது. அதனையும் எதிர்கொண்டு வெளியே வருவேன். எனது செயலை செய்வேன்" என்று தெரிவித்துள்ளான். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Mohammad Siyad #Rape #police #Investigation #Love Trap
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story