×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தொடர் விடுமுறையால் மெட்ரோ ரயில் சேவை இரவு 11 வரை நீட்டிப்பு.!

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்களின் வசதிக்காக அக்டோபர் 29-ம் தேதி நாளை  வியாழக்கிழமை மட்டும் சென்னை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தொடர் விடுமுறை காரணமாக நாளை (அக்.29) வியாழக்கிழமை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 30-ம் தேதி மிலாது நபியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#metro train #holy day
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story