அய்யய்யோ... சென்னையில் ஒரு வருடத்தில் ரூ.1 லட்சத்திற்கு ஆன்லைனில் ஆணுறை வாங்கிய நபர்! ஸ்விக்கி வெளியிட்ட புள்ளிவிவரம்!
ஸ்விக்கி 2025 தரவுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த ஒருவர் ஓராண்டில் மட்டும் ₹1.06 லட்சம் ஆணுறைகளுக்கு செலவிட்டுள்ளார்.
ஆன்லைன் ஷாப்பிங் பழக்கங்கள் நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில், சென்னையில் இருந்து வெளியான ஒரு புள்ளிவிவரம் இணைய உலகில் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தினசரி தேவைகளுக்கான டெலிவரி சேவைகள் வாழ்க்கை முறையை எவ்வளவு மாற்றியுள்ளன என்பதற்கு இது ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது.
ஆணுறைகளுக்கு ₹1.06 லட்சம் செலவு
சென்னையைச் சேர்ந்த ஒருவர், ஓராண்டில் மட்டும் ஆணுறைகள் வாங்குவதற்காக ₹1,06,398 வரை செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவரம் பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான தரவுகளில் இடம்பெற்றுள்ளது. அந்த நபர் மொத்தமாக 228 முறை ஆணுறை ஆர்டர் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் திருநங்கைக்கு வீடியோ கால் அழைப்பு! ஆதாரத்துடன் நிரூபித்த திருநங்கை! அப்போ நாஞ்சில் தான் ஏமாற்றினாரா?
ஸ்விக்கி வெளியிட்ட புள்ளிவிவரங்கள்
ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் தளங்களில் ஆணுறை விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக, ஒவ்வொரு 127 ஆர்டர்களில் ஒரு ஆர்டர் ஆணுறையாக இருப்பதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஸ்விக்கி போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் தனிப்பட்ட மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் பழக்கம் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. நேரடி கடை வாங்குதலைவிட ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரிப்பது ஆன்லைன் ஷாப்பிங் கலாச்சாரம் வலுப்பெறுவதை வெளிப்படுத்துகிறது.
இந்த புள்ளிவிவரங்கள், தனிநபர் விருப்பங்கள் முதல் சமூக பழக்கங்கள் வரை பல மாற்றங்களை சுட்டிக்காட்டுகின்றன. 2025-ஆம் ஆண்டின் ஸ்விக்கி தரவுகள், நகர வாழ்க்கையில் வாழ்க்கை முறை மாற்றம் எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கான ஒரு தெளிவான சான்றாக பார்க்கப்படுகிறது.