கள்ளக்காதலுக்கு எண்டு கார்டு.. கல்யாணம் பண்ணிக்கலாம் வா.. நேரில் வந்த இளைஞரால் பெண் விபரீதம்.!
Chennai News: கள்ளக்காதலுக்கு வீடுதேடி தொல்லை கொடுத்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்காதல் உறவை திருமண பந்தத்தில் இணைக்க இளைஞர் எடுத்த முடிவு பெண்ணின் உயிரை பரிதவிக்க வைத்துள்ளது. இளைஞரும் தற்போது சிறையில் இருக்கிறார்.
இளம்பெண்:
சென்னையில் உள்ள கொளத்தூர் பகுதியில் 31 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு 11 & 5 வயதுடைய இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். முகப்பேரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலால் சிதைந்துபோன குடும்பம்.. லீக்கான வீடியோவால் பிடித்த தீ.. காரசார விவாதம்.! தமிழகத்தில் அப்படி என்ன நடந்தது?
பிரிந்தனர்:
கடந்த 2011ம் ஆண்டு விநாயகபுரத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்தபோது, பத்மநாபன் என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே ஒருகட்டத்தில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. பின் இருவரும் பிரிந்து இருக்கின்றனர்.
சைக்கோ கள்ளக்காதலன்:
இதனிடையே, சில மாதங்களாவே பெண்ணுக்கு மீண்டும் தொடர்புகொண்ட இளைஞர், அலுவகத்துக்கு நேரில் சென்று தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கூறி வந்துள்ளார். மேலும், உன்னால் தான் எனது மனைவி பிரிந்து சென்றுவிட்டார் என்பதால், நீ உனது குடும்பத்துடன் சந்தோசமாக வாழக்கூடாது. என்னுடன் வா என பிரச்சனை செய்துள்ளார்.
தற்கொலை முயற்சி:
பின் சம்பவத்தன்று பெண்ணின் வீட்டுக்கு நேரடியாக சென்றவர், அவரின் கணவரிடம் "உனது மனைவி என்னுடன் தனிமையில் இருந்தார். இப்போது அவரை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும்" என பிரச்சனை செய்துள்ளார். இதனால் வேதனையடைந்த பெண் வீட்டில் இருந்த எலி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
கைது:
இதனையடுத்து, பெண்ணை மீட்ட குடும்பத்தினர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளன. இதுதொடர்பாக பெண் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் பத்மநாபனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஐடி ஊழியரை ஏமாற்றிய இளைஞர்.. ஸ்கெட்ச் போட்ட பெண்.. உள்ளே தூக்கி வைத்த காவல்துறை.!