பல்கா 92 லட்சம் போச்சே! சென்னையில் வீட்டு மனை வாங்கிய நபர்! பத்திரப்பதிவுக்கு முன் கவனிக்காமல் விட்ட சிறு தவறு! மக்களே உஷார்...
சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.92 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலம் வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
சென்னையில் நிலம் வாங்குவது இன்று மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது. பெரும் தொகையை முதலீடு செய்த பிறகும் சிலர் போலி ஆவணங்கள் மூலம் மோசடிக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், நிலம் வாங்குபவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது.
92 லட்சம் ரூபாய் மோசடி
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நந்தகுமார் என்ற நபர், பேஸ்புக்கில் வந்த நில விளம்பரத்தை நம்பி, 1,200 சதுர அடி நிலம் வாங்க ரூ.92 லட்சம் செலுத்தினார். அவருக்கு சட்டப்படி பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும், உண்மையில் அந்த நிலம் மற்றொருவருக்கு சொந்தமானது என பின்னர் தெரியவந்தது.
மோசடி கும்பல் கைது
நந்தகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மணலி புதுநகர் சையது சலாவுதீன், எருக்கஞ்சேரி அபூபக்கர், திருநின்றவூர் வெங்கடேசன், அம்பத்தூர் கலீல் ரகுமான் மற்றும் கொடுங்கையூர் அப்துல் ரசாக் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் போலி ஆவணங்களை தயாரித்து நிலத்தை தங்களது பெயரில் மாற்றி மோசடி செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பணக்காரர் ஆக ஆசைப்படுறீங்களா? இந்த 7 தந்திரம் தெரிஞ்சு வச்சுக்கோங்க...
நிலம் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியது
சென்னையில் வீட்டு மனை அல்லது நிலம் வாங்க விரும்புவோர், பட்டா, சிட்டா, வரி ரசீது உள்ளிட்ட ஆவணங்களை முழுமையாக சரிபார்க்க வேண்டும். நில மோசடி தவிர்க்க, ஈசி பதிவு மூலம் சோதனை செய்வது அவசியம். மேலும், சட்ட வல்லுநர் ஆலோசனையுடன் பத்திரங்களை ஆய்வு செய்தால் பாதுகாப்பாக இருக்க முடியும்.
சென்னையில் நடந்த இந்த மோசடி, நிலம் வாங்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை நினைவூட்டுகிறது. ஆவணங்களை முறையாகச் சரிபார்த்து, நம்பகமான வழிகள் மூலம் மட்டுமே நிலம் வாங்குவது தான் மக்களின் முதலீட்டை பாதுகாக்கும் முக்கியமான பாதையாகும்.
இதையும் படிங்க: எல்லாம் இதற்காக தானா! உயிரோடு இருக்கும் குழந்தையை இறந்ததாக கூறி நாடகம் போட்ட பெற்றோர்! இறுதியில் அம்பலமான உண்மை! சேலத்தில் பரபரப்பு...