தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அலட்சியம்..! மனைவி, மகள் கண்முன்னே கடற்படை அதிகாரி செய்த காரியத்தால் பறிபோன உயிர்..!

அலட்சியம்..! மனைவி, மகள் கண்முன்னே கடற்படை அதிகாரி செய்த காரியத்தால் பறிபோன உயிர்..!

Chennai Kovalam Beach Navy Officer Died Sea Advertisement

கோவளம் கடலில் கணவன் மனைவி மற்றும் மகள் கண் முன்னே அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. 

சென்னையை அடுத்துள்ள கோவளம் கடலில், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்த இந்திய கடற்படை அதிகாரி சுரேஷ், கடலில் இறங்கி குளிக்க முயற்சித்துள்ளார். இதன்போது, அலையில் சிக்கி கடலுக்குள் இழுக்கப்பட்டுள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷின் மனைவி மற்றும் மகள், சுரேஷை காப்பாற்ற கூக்குரலிடவே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடற்படை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் அவரை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஆனால், அது பலனளிக்காததால் சுரேஷ் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக பலியாகினர். இந்திய கடற்படை, விமானப்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் சுரேஷின் சடலத்தை தேடி வந்தனர். 

chennai

இந்நிலையில், 18 மணி நேரத்திற்கு பின்னர், மாமல்லபுரம் புலிக்குகை கடற்கரைப் பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுரேஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

கடற்படை அதிகாரி கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், ஆபத்தான கடல் சீற்றம் உள்ள இடங்களில் குளிப்பது ஆபத்தானது எனவும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #kovalam beach #death #Navy officer #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story