தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படிப்பில் கவனத்தை செலுத்து என தாய் கூறியதால் விரக்தி.. 17 வயது சிறுமி தற்கொலை.!

படிப்பில் கவனத்தை செலுத்து என தாய் கூறியதால் விரக்தி.. 17 வயது சிறுமி தற்கொலை.!

Chennai Korattur 17 Aged Minor Girl Suicide Mother Advice Concentrate Studies  Advertisement

சென்னையில் உள்ள கொரட்டூர், தேவர் நகர் திருவல்லீஸ்வரர் காலனியை சேர்ந்தவர் துளசி (வயது 48). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கீதா. இந்த தம்பதியினருக்கு ஹரிதா என்ற 17 வயதுடைய மகள் இருக்கிறார். 

ஹரிதா முகப்பேரில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், ஹரிதாவின் தாய் கீதா தனது மகளிடம், "நீ வரவர சரியாக படிப்பது இல்லை. படிப்பில் கவனத்தை செலுத்து" என்று கூறி கண்டித்து இருக்கிறார். 

இதனால் மனமுடைந்துபோன ஹரிதா அழுதுகொண்டே தனது அறைக்கு சென்ற நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து மகளை சமாதானம் செய்ய சென்ற தாய், மகள் தூக்கில் இருப்பதை கண்டு அலறியுள்ளார். 

chennai

இதனைக்கேட்டு அதிர்ச்சியுடன் விரைந்த அக்கம் பக்கத்தினர், ஹரிதாவை மீட்டு அருகே இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். ஹரிதாவை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கொரட்டூர் காவல் துறையினர், ஹரிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Korattur #tamilnadu #Minor Girl #suicide #mother #Advice #study
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story