தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடும்பத்துடன் தற்கொலை முயற்சி.. முதிய தம்பதி பலி., அக்கா - தம்பி உயிர் ஊசல்.!

குடும்பத்துடன் தற்கொலை முயற்சி.. முதிய தம்பதி பலி., அக்கா - தம்பி உயிர் ஊசல்.!

Chennai Kolathur Aged Couple Suicide His Son and Daughter Critical Stage at GH Advertisement

சென்னையில் உள்ள கொளத்தூர், பாலாஜி நகர் 5 ஆவது தெருவை சார்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 62). இவரது மனைவி பாரதி (வயது 59). தம்பதிகள் இருவரும் நேற்று அதிகாலை நேரத்தில் விஷம் குறித்து தற்கொலை செய்துள்ளனர். 

இதன்போது, வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த மகள் பாக்கியலட்சுமி (வயது 40), மகன் தினேஷ் (வயது 35) ஏகு சென்றார்கள் என்பது தெரியாமல் இருந்தது. இதனால் கொளத்தூர் காவல் துறையினர் அவர்களை தேடி வந்தனர். 

இன்று அதிகாலை நேரத்தில் தினேஷ் மற்றும் பாக்கியலட்சுமி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இருப்பது உறுதியாகவே, தகவல் அறிந்த காவல் துறையினர் 2 பேரையும் மீட்டுள்ளனர். 

chennai

விசாரணையில், பெற்றோருடன் சேர்ந்து இருவரும் விஷம் குறித்து உறுதியான நிலையில், இருவரும் வாந்தி எடுத்த காரணத்தால் விஷம் உடலுக்குள் பரவுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், உடல்நிலை மோசமாக இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் இருவரும் அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரும் எதற்காக விஷம் குறித்து கிழக்கு கடற்கரை பகுதிக்கு சென்றனர்? பெற்றோர்கள் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்கள்? குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சித்தது ஏன்? என தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #kolathur #tamilnadu #suicide #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story