திருட்டுத்தனமாக சரக்கை விற்பனை செய்வதில் தகராறு; வாடிக்கையாளருக்கு கத்தியால் சதக்., சதக்.. பறிபோன உயிர்.!
திருட்டுத்தனமாக சரக்கை விற்பனை செய்வதில் தகராறு; வாடிக்கையாளருக்கு கத்தியால் சதக்., சதக்.. பறிபோன உயிர்.!
மதுவகையை அதிக விலைக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்த கும்பலிடையே ஏற்பட்ட சண்டையில் வாடிக்கையாளர் கொலை செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள துரைப்பாக்கம், கண்ணகி நகரில் மதுபான கடையில் மொத்தமாக மதுவகைகளை வாங்கி கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக இரவு நேரங்களில் விற்பனை செய்யும் செயலானது தொடர்ந்து வந்துள்ளது. இந்த திருட்டுத்தனத்தில் ஈடுபடும் முத்துவேல் என்பவரின் தரப்புக்கும், குணால் என்பவரின் தரப்புக்கும் இடையே மோதலும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் மணிகண்டன் (வயது 31) என்பவர், நேற்று நள்ளிரவு நேரத்தில் முருகவேலிடம் மதுவகை வாங்கியுள்ளார். இதனைக்கண்ட குணால் மணிகண்டனை அழைத்து எதற்காக அவனிடம் மதுபானம் வாங்கினாய்? என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
மணிகண்டனோ, மதுபானம் வாங்குவது எனது விருப்பம் என்று பேச, இதனால் இருதரப்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட நிலையில், குணால் தனது ஆடையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனை மார்பு, வயிறு பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் மணிகண்டன் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கண்ணகி நகர் காவல் துறையினர் மணிகண்டனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வாழ்கைக்குப்பதிவு செய்து முருகவேள், ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான குணாலை கைது செய்ய தனிப்படை வலைவீசியுள்ளது.