×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்த 4 நாட்களுக்கு மழை முன்னறிவிப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம்.!

அடுத்த 4 நாட்களுக்கு மழை முன்னறிவிப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம்.!

Advertisement

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 7 & 8 ஆம் தேதி தமிழகத்தில் மழை பெய்யலாம், 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வறண்ட வானிலே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 7 ஆம் தேதியான இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

8 ஆம் தேதியை பொருத்தவரையில், தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஒரு சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். 

தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Chennai IMD #weather update #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story