தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னை விட்டு அவன்கூட கள்ளக்காதலா?.. பிலிப்ஸின் ஆத்திரத்தால் காவலாளி உடல் துண்டித்து படுகொலை.!

என்னை விட்டு அவன்கூட கள்ளக்காதலா?.. பிலிப்ஸின் ஆத்திரத்தால் காவலாளி உடல் துண்டித்து படுகொலை.!

Chennai Illegal Affair Issue Cuddalore Man Killed  Advertisement

 

சென்னை செம்பரம்பாக்கம் ஏரி, சிறுகளத்தூர் பகுதியில் கடந்த மாதம் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்டவாறு ஆணின் சடலம் குன்றத்தூர் காவல் துறையினரால் மீட்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் கொலையானவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பூமிநாதன் (வயது 40), நந்தம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை வர்த்தக மையத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு தன்னுடன் வேலைபார்த்து வந்த நாகலட்சுமி என்ற பெண்மணியோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. 

chennai

இருவருக்கும் இது கள்ளக்காதலாக மாறவே, பல நேரங்களில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே, நாகலட்சுமி குன்றத்தூர் சிறுகளத்தூர் பகுதியில் வசித்து வரும் பிலிப்ஸ் என்ற வாலிபருடனும் தொடர்பில் இருந்து இருக்கிறார். பிலிப்சுக்கு பூமிநாதனுடன் நாகலட்சுமி கொண்ட உறவு தெரியவரவே, ஆத்திரமடைந்தவர் பூமிநாதனை தனது நண்பர் வினோத்தின் உதவியுடன் செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூமிநாதனை அழைத்து வந்து மதுவை ஊற்றிவிட்டு சுட்டுக்கொலை செய்துள்ளனர். 

பின் அவரின் தலை, கை-கால்களை வெட்டியெடுத்து, கல்லைகட்டி ஏரியில் வீசி இருக்கின்றனர். தலையை மட்டும் வண்டலூர் ஏரியில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் வினோத், பிலிப்ஸ் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Affair #tamilnadu #Murder #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story