×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: ஆனந்த விகடன் இணையதள முடக்கம் விஷயத்தில் பச்சைக்கொடி காண்பித்த நீதிமன்றம்.. மத்திய அரசுக்கு உத்தரவு.!

#Breaking: ஆனந்த விகடன் இணையதள முடக்கம் விஷயத்தில் பச்சைக்கொடி காண்பித்த நீதிமன்றம்.. மத்திய அரசுக்கு உத்தரவு.!

Advertisement

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் அமெரிக்காவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன், பிரதமர் நேரில் சந்தித்து இருந்தார்.

பாஜக எதிர்ப்பு

இந்த சந்திப்பு தொடர்பாக விகடன் பத்திரிக்கை நிறுவனம், கார்டூன் ஒன்று வெளியிட்டது. அந்த கார்டூனில் பிரதமர் மோடியின் கைகளில் விலங்கு இடப்பட்டதுபோல காட்சிகள் இருந்தது. இந்த விசயத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையும் படிங்க: முன்கள பணியாளர்ளை பிற வேலைகளுக்கு ஈடுபடுத்தி கமிஷன் கேட்டு மிரட்டல்? குமுறல்.!

மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு புகார் அனுப்பி, அதன்பேரில் விகடன் இணையப்பக்கம் முடக்கம் செய்யப்பட்டது. 

நீதிமன்றம் உத்தரவு

இந்த முடக்க உத்தரவை எதிர்த்து விகடன் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்நிலையில், விகடன் இணையதள முடக்கத்தை நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. 

கடந்த பிப்.15 அன்று முடக்கப்பட்ட இணையத்தை, உடனடியாக மீண்டும் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள நீதிமன்றம், சர்ச்சைக்குரிய புகைப்படத்தை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கூறி இருக்கிறது.
 

இதையும் படிங்க: #Breaking: தந்தை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை.. வாட்ஸப்பில் தகவல்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்.. சென்னையில் பயங்கரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Chennai HC #Vikatan #Central Govt #bjp #சென்னை #விகடன் #பாஜக
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story