×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முடிமாற்று அறுவை சிகிச்சை.. சென்னையில் அம்பலமான திடுக் உண்மை.. பரபரக்க வைக்கும் தகவல்.!

Mister Hair Chennai: பனிரெண்டாம் வகுப்பு படித்தவர்களை கொண்டு முடிநடும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement

Hair Transplant Chennai: மருத்துவம் படிக்காத நபர்களை கொண்டு ஆபத்தான முறையில் முடிநடும் சிகிச்சை மேற்கொண்டால் மாரடைப்பு மரணம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ஜிம் பழக்கம்:

Mister Hair Transplant Chennai: சென்னையில் வசித்து வரும் பெண்மணி திவ்யா. இவர் உடற்பயிற்சி மையத்திற்குச் சென்றபோது செலி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கணவர் ராஜாராம் மருத்துவர் என்றும், பல மருத்துவமனை வைத்து நடத்தி வருவதாக கூறி இருக்கிறார். மேலும், தலையில் முடி நடும் மருத்துவம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ரூ.30 லட்சம் செலவில் புதிய மருத்துவமனை அமைத்து ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார். 

கொலை மிரட்டல்:

இதனிடையே, பெரம்பூர் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தபோது, முடி நடும் சிகிச்சை அளிப்பவர்கள் போலியானவர்கள் என்பது திவ்யாவுக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் 10 ம் வகுப்பு முடித்த வடமாநில இளைஞர்கள் என்ற அதிர்ச்சி தகவல் உறுதியாகியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும், தனக்கும் பிரச்சனை வரும் என உணர்ந்த திவ்யா, செலியின் கணவரிடம் பேசியபோது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதிரடி நடவடிக்கை:

இதனையடுத்து, மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி போலி மருத்துவர்களை கைது செய்தனர். மேலும், மருத்துவமனை அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலி மருத்துவர்கள் குறித்து திவ்யாவும் புகார் அளித்துள்ளார். அண்ணா நகரில் செயல்படும் முடி நடும் சிகிச்சை மையத்திலும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தபோது, அங்கும் போலி மருத்துவர்கள் கொண்டு முடி நடும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது உறுதியானது. 

பக்கவிளைவு அபாயம்:

இந்த மையத்தில் வேலை பார்த்த 20 பேர் +2 மாணவர்கள் என்பதும், வேலூர் மற்றும் பஞ்சாபை சேர்த்தவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறான அனுபவம் இல்லாதவர்களால் செய்யப்படும் முறையற்ற சிகிச்சை காரணமாக, முடிநடும் சிகிச்சை செய்தவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பின்னரே அறிகுறிகள் தெரியும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. உரிய மருத்துவர்கள் இன்றி இந்த சிகிச்சைகளை பலரும் செய்துவருவதாக கூறப்படுகிறது. இந்த மையத்தை நடத்தி வந்த ராஜாராமை விசாரிக்கவும் சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மாரடைப்பு அபாயம்:

Mister Hair கிளீனிக் இந்தியா முழுவதும் 14 கிளைகள் அமைத்து, 10,000 பேருக்கு மேல் சிகிச்சை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக ரூ.40,000 முதல் பல லட்சங்கள் வரை வாங்கி இருக்கின்றனர். ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனையை பெற்று சிகிச்சை வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான நபர்களால் வழங்கப்படும் சிகிச்சை காரணமாக மாரடைப்பு, உடல் உறுப்பு செயலிழந்து மரணம் ஏற்படலாம் என தோல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 2016ல் மருத்துவக்கல்லூரி மாணவர் இவ்வாறான விஷயத்தால் உயிரிழந்த நிலையில், மீண்டும் இது நடந்து வருவது அம்பலமாகியுள்ளது.

மிஸ்டர் ஹேர் நிறுவனத்தின் விளம்பரம்:


 
 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Hair transplant #Mister Hair Chennai #முடிநடும் சிகிச்சை #மிஸ்டர் ஹேர் சென்னை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story