தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏற்றுமதி நிறுவன தொழிலதிபரை குறிவைத்து மோசடி.. ரூ.78 இலட்சம் அபேஸ்..!

ஏற்றுமதி நிறுவன தொழிலதிபரை குறிவைத்து மோசடி.. ரூ.78 இலட்சம் அபேஸ்..!

Chennai Export Business Man Cheated by Online Portal Robbers Rs 78 Lakh Stolen Advertisement

சென்னையில் உள்ள தியாகராய நகர் பகுதியில் வசித்து வரும் தொழிலதிபர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில், "நான் வெளிநாடுகளுக்கு துணிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இதற்காக மத்திய அரசின் வெளிநாட்டு வணிகம் தொடர்பான DGFT இணையத்தளத்தில் கணக்கு வைத்துள்ளேன். 

அரசு எனக்கு அளித்த இன்சென்டிவ் பாயிண்டுகளை, எனது அக்கவுண்டில் இருந்து மற்றொரு அக்கவுட்டுக்கு மாற்றிய மர்ம நபர்கள் ரூ.78,32,444 மோசடி செய்துள்ளனர். இந்த பணம் எனக்கு பெரும் இழப்பு ஆகும். மோசடியில் ஈடுபட்ட நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

chennai

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், டெல்லியில் வைத்து 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் அவர்கள் பர்வீன் அகர்வால், மணீஷ் அகர்வால் ஆகியோரின் மோசடி குழுவை சார்ந்தவர்கள் என்பது உறுதியானது.

இவர்கள் இருவரும் ஏற்கனவே மற்றொரு மோசடி விவகாரத்தில் ஹரியானா காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களின் கூட்டாளியான அருண் குமார் & சச்சின் கார்க் ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Businessman #cheating #police #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story