தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் கடும் விளைவு.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.!

செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் கடும் விளைவு.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.!

CHennai corps announcement for septic tank cleaners Advertisement

கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியில் சுத்தம்செய்வதன் மூலம் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் பலரும் மனிதகழிவுகளை மனிதர்களே நீக்குவதா என்று கண்டனம் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி, கட்டிடங்கள், கழிவுநீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

chennai

ஒருவேளை தனி நபரை நியமித்து சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் வீட்டு உரிமையாளர்களே பொறுப்பாவார்கள் என்றும், அவ்வாறு இறக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உரிமையாளர்கள் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனிநபர் நியமிக்கப்படுவதை மக்கள் அறிந்தால் 14420 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #tamilnadu #Chennai corporation #Sewage Treatment
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story