சிட்டி விஞ்ஞானிகள்..! பாதாள சாக்கடையில் கொசுவலை....இந்த ஐடியாவ நீங்களே பாருங்க! சிரிப்பு தான் வருது... வைரல் வீடியோ! !
சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் முடிந்த நிலையில், கொசு கட்டுப்பாட்டுக்காக பாதாள சாக்கடையில் கொசுவலை பொருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகால் பணிகளுக்குப் பிறகு, தற்போது கொசு கட்டுப்பாட்டுக்காக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது.
பாதாள சாக்கடையில் கொசுவலை
சென்னை மாநகராட்சியில் சுமார் 4000 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொசு உற்பத்தியைத் தடுக்கும் முயற்சியாக மாநகராட்சி ஊழியர்கள் பாதாள சாக்கடையின் மூடியை திறந்து அதன் மீது கொசுவலை அமைத்தனர்.
பாதாள சாக்கடைகளிலிருந்தே அதிக அளவில் கொசுக்கள் வெளிவருவதாக கூறப்படும் நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொசுவலை அமைத்த பின்னர் மீண்டும் இரும்பு மூடியை பொருத்தி சாக்கடையை மூடியுள்ளனர்.
இதையும் படிங்க: பெண்ணை வாயை பிளந்து ஆக்ரோஷமாக தாக்க முயன்ற முதலை! நடுவில் அது மட்டும் இல்லாட்டி அவ்வளவுதான்..... திகிலூட்டும் காணொளி!
மக்கள் சிரிப்பில் மூழ்கினர்
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் சிரிப்பில் மூழ்கியுள்ளனர். கொசு வலையால் உண்மையிலேயே பயன் இருக்கும் என்கிற சந்தேகத்தையும் சிலர் எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
செல்லூர் ராஜு சம்பவம் நினைவுக்கு
இதற்கு முன்பு, வைகை அணையில் நீர் ஆவியாகாமல் இருக்க அப்போது அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு தெர்மாகோல் போட்டு காட்டிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த புதுமையான முயற்சி உண்மையில் கொசு பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், அதிகாரிகளின் கொசு கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து கவனிக்கப்பட உள்ளன.