தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதல் பழக்கத்தால் விபரீதம்: கணவரை கார் ஏற்றி கொன்ற மனைவி.. ஓடோடி உதவிய நண்பன்.!

கள்ளக்காதல் பழக்கத்தால் விபரீதம்: கணவரை கார் ஏற்றி கொன்ற மனைவி.. ஓடோடி உதவிய நண்பன்.!

Chennai Ayanavaram Man Killed Due to Affair  Advertisement

 

சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் வசித்து வருபவர் பிரேம் குமார். இவர் இரும்பு வியாபாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த பிரேமின் மீது கார் மோடி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அவர் பரிதாபமாக பலியாகினர். 

இந்த விஷயம் தொடர்பாக அண்ணாநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இவ்விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், விபத்தினை ஏற்படுத்திய காரில் இருந்து இறங்கிய மர்ம நபர், வேறொரு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றதாகவும் கூறியுள்ளனர். 

விசாரணையில் அயனாவரம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், சமீபத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள காரை ஓஎல்எக்ஸ் தளத்தில் இருந்து வாங்கியது உறுதியானது. சந்தேகத்தின் பேரில் ஹரிகிருஷ்ணனை அதிகாரிகள் தேட, பிரேமின் சகோதரி, சகோதரரனின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணையை முன்னெடுக்க, எனது கணவரை யாரேனும் கொலை செய்திருக்கலாமோ? என காவல் நிலையத்தில் கதறி அழுது சன்பிரியா கபட நாடகம் ஆடி இருக்கிறார். இதற்கிடையில், ஹரியை கைது செய்த காவல் துறையினர், அவரின் செல்போன் அழைப்புகளை சோதித்தபோது பிரியாவுடன் ஹரி பேசியது தெரியவந்தது. 

chennai

உரிய விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து, கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. விபத்தை கொலை வழக்காக மாற்றிய அதிகாரிகள், சட்டம் ஒழுங்கு பிரிவிடம் ஒப்படைத்தைத்தொடர்ந்து விசாரணையில் அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது. 

அதாவது, ஹரிக்கும் - பிரியாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விவகாரம் பிரேமுக்கு தெரியவந்து, அவர் தனது மனைவியை கண்டித்து தாக்கி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதல் ஜோடி, பிரேமை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறது. 

இவர்களின் கொலை சம்பவத்தை யாரும் அறிந்துவிடக்கூடாது என ஓ.எல்.எக்ஸ் தளத்தில் காரை வாங்கி, விபத்து போல கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு தன்னுடன் பள்ளிக்கூடத்தில் படித்த நண்பன் சரத் குமாரை உதவியாக அழைத்துக்கொண்ட ஹரி கிருஷ்ணன், கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார். 

கள்ளக்காதல் வயப்பட்ட மனைவியால் கணவர் விபத்து நடந்த நிகழ்விடத்திலேயே துள்ளத்துடிக்க உயிரிழந்தார். விசாரணையில் உண்மையை அறிந்த காவல் துறையினர் கள்ளக்காதல் ஜோடி ஹரிகிருஷ்ணன், சன் பிரியா மற்றும் ஹரியின் நண்பர் சரத் குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Ayanavaram #death #Affair #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story