×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கடவுளே.. இரயில் இன்ஜினில் தலைமுடி சிக்கி., இழுத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி.! பதறவைக்கும் சோகம்.!!

அடக்கடவுளே.. இரயில் இன்ஜினில் தலைமுடி சிக்கி., இழுத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி.! பதறவைக்கும் சோகம்.!!

Advertisement

சென்னையில் உள்ள அம்பத்தூர், கள்ளிகுப்பம், சீனிவாசா நகரில் வசித்து வருபவர் ரோசரி நர்சீசன் துரை. இவரின் மகள் கேத்ரின் ஷீபா (வயது 22). இவர் வேப்பேரி பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் கிறிஸ்டோபர் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வந்துள்ளார். 

நேற்று முன்தினம் காலை நேரத்தில், வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், வெளிய செல்ல பெரம்பூர் இரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். காலை சுமார் 09:30 மணியளவில் தண்டவாளத்தை கடக்க முற்படவே, திருவனந்தபுரத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி பயணித்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இரயில் மோதியது. 

அதிவிரைவு இரயில் மோதி சோகம்

இந்த சம்பவத்தில் எஞ்சினின் முன்பக்க பகுதியில் ஷீபாவின் தலைமுடி சிக்கிக்கொண்டது. இரயில் வேகமாக வந்ததால், உடனடியாக இரயில் நிறுத்த முற்பட்டபோதிலும், சுமார் 2 கிமீ தூரம் சென்ற பின்னரே இரயில் நின்றது. இதனால் மாணவியின் உடல் இழுத்தபடி வந்தது. 

இதையும் படிங்க: சென்னை: ஏடிஎம்-ல் பணம் எடுக்கச்சென்ற இளைஞர் பலி.. பதறிய பொதுமக்கள்..!

தகவல் அறிந்து வந்த இரயில்வே காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்க முற்பட்டதே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: திண்டுக்கல்: கட்டிங் மெஷின் பிளேடு பாய்ந்து கழுத்து அறுபட்டு பறிபோன உயிர்.. ரீவைண்டிங் கடையில் சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#death #Tiruvananthapuram Express Train #Ambattur Woman Dies #chennai #சென்னை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story