×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வயிற்றுக்குள் தங்கம் கடத்தி வந்த பெண் கைது; சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு.!

chennai airport - 2 mempers arrest - gold jewel

Advertisement

சென்னை விமான நிலையத்தில் அயன் பட பாணியில் வயிற்றுக்குள் வைத்து தங்கம் கடத்தி வந்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

கொழும்புவிலிருந்து ஸ்ரீலங்கன் விமானம் நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது அதில் பயணம் செய்த பயணிகள் ஒருவர் பின் ஒருவராக இறங்க தொடங்கியுள்ளார்கள். அதில் ஒரு பெண் மட்டும் வித்தியாசமாக நடந்து வந்தது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படும் விதமாக இருந்துள்ளது.

அதனால் அந்தப் பெண்ணை தனியறையில் வைத்து சோதனை செய்தனர். சோதனை முடிவில் போலீசார் அதிர்ச்சி அடைந்தன. ஏனெனில் மலக்குடலில் வைத்து 198 கி 24 கேரட் தங்கச் செயினை கடத்தி வந்துள்ளார். அதன் மதிப்பு ரூ.6.5 லட்சம் ஆகும். இதனால் சுங்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். 

மேலும், சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்து சேர்ந்தது. அப்போதும் பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்,

முகமது நிசாம்(46) என்பவரின் பேக்கில் இருந்து 17 ஆப்பிள் வாட்ச், 10 ஐபோன் 6எஸ், 6 சிக்மா கேமரா லென்ஸ், 900 2ஜிபி ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும். 

மேலும் 40 கி 24 கேரட் தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.30 லட்சம் ஆகும். இவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilspark #srilanka #airport
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story