முதல் முறையாக 27 வயது இளம் கர்ப்பிணி பெண் தமிழகத்தில் கொரோனாவால் பலி..! பிறந்த குழந்தையும் துடிக்க துடிக்க மரணம்.!
Chennai 27 years old pregnant women died due to corono
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் இழப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 27 வயதான பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த நிலையில் கொரோனோவால் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையியல் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்க்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவம் நடந்துகொண்டிருந்தபோதே அந்த பெண்ணின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவருக்கு கொரோன பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனைக்காக முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே அந்த பெண்ணும், பிறந்த குழந்தையும் உயிர் இழந்தனர்.
இந்த செய்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் மருத்துவமனையில் இருந்து சடலங்களை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் உறவினர்களின் முன்னிலையில் இறுதி சடங்கு செய்தனர். பிரசவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள், அடக்கம் செய்த குடும்பத்தினர் யாரும் எந்த வித கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் உயிர் இழந்த பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு இருந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தற்போது யாருக்கெல்லாம் இந்த வைரஸ் தொற்று பரவியிருக்கும் என்பது குறித்து அதிகாரிகள் மத்தியில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.