×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரேஷன் கடை திறந்திருக்கிறதா.? வீட்டிலிருந்தே தெரிந்துகொள்ள புதிய வசதி.!

ரேஷன் கடை திறந்திருக்கிறதா.? வீட்டிலிருந்தே தெரிந்துகொள்ள புதிய வசதி.!

Advertisement

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பயனுள்ள புதிய எஸ்எம்எஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே அருகிலுள்ள ரேஷன் கடை திறந்திருக்கிறதா? அல்லது மூடப்பட்டிருக்கிறதா? என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

இதற்காக, ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என்று டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு, சம்பந்தப்பட்ட ரேஷன் கடை தற்போது திறந்துள்ளதா அல்லது மூடப்பட்டுள்ளதா என்பது குறித்து பதில் குறுஞ்செய்தி கிடைக்கும்.

அதேபோல், ரேஷன் கடைகள் தொடர்பான புகார்களை பதிவு செய்யவும் இந்த சேவையை பயன்படுத்தலாம். அதற்காக PDS 107 என்று டைப் செய்து அதே 9773904050 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால், புகார் பதிவு செய்யும் நடைமுறை தொடங்கப்படும்.

இதையும் படிங்க: ரேஷன் அட்டைதாரர்களே....இதை செய்யாவிட்டால் இனி ரேஷன் பொருட்கள் வாங்க முடியாது! வெளியான முக்கிய அறிவிப்பு!

ரேஷன் கடைக்கு தேவையில்லாமல் சென்று ஏமாற்றமடைவதை தவிர்க்கவும், பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும் இந்த எஸ்எம்எஸ் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க: இனி இவர்களுக்குயெல்லாம் ரேஷன் பொருட்கள் கிடையாது! மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் கடுமையான புதிய விதிகள்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ration shop #ration card #tamilnadu #SMS #Ration smart shop
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story