தாம்பரம் சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலைவாய்ப்பு.. மாதம் ரூ.1.77 லட்சம் சம்பளம்.!
சென்னையில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் சனிட்டோரியத்தில் செயல்படும் CCRS நிறுவனத்தில் ஆராய்ச்சி, ஆய்வக பணிகளுக்கு நேரடி வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1.77 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
14 காலிப்பணியிடங்கள்:
சென்னை தாம்பரம் சனிட்டோரியத்தில் இயங்கி வரும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Central Council for Research in Siddha - CCRS) நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பதவிக்கேற்ப ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.1,77,500 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு AYUSH அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய அரசுத் துறையில் பணிபுரிய விரும்புவோருக்கு முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: மாதந்தோறும் ரூ. 1500 வழங்க... தமிழகம் முழுவதும் நாளை(நவ..20) அனைத்து பள்ளிகளுக்கும் அரசு வெளியிட்ட அவசர அறிவிப்பு.!
முன்னுரிமை வழங்கப்படும்:
இந்த அறிவிப்பின் படி, ஆராய்ச்சி அலுவலர் (சித்தா) 2 பணியிடங்கள், ஆராய்ச்சி உதவியாளர் (வேதியியல்) 2 பணியிடங்கள், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் 9 பணியிடங்கள் மற்றும் ஆய்வக உதவியாளர் 1 பணியிடம் என மொத்தம் 14 காலியிடங்கள் உள்ளன. ஆராய்ச்சி மற்றும் ஆய்வக துறைகளில் அனுபவம் கொண்டவர்களுக்கு இந்த பணிகள் முன்னுரிமை வாய்ந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதிகள்:
ஆராய்ச்சி அலுவலர் (சித்தா) பதவிக்கு, NCISM அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சித்த மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு, மத்திய அல்லது மாநில இந்திய மருத்துவ பதிவேட்டில் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆய்வக உதவியாளர் பதவிக்கு, 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி அவசியம். அறிவியல் பாடப்பிரிவில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் பணியனுபவம் இருப்பது கட்டாயமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பளம்:
சம்பள விவரங்களைப் பொறுத்தவரை, ஆராய்ச்சி அலுவலர் பதவிக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை, ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பதவிகளுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை, ஆய்வக உதவியாளர் பதவிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை மாத ஊதியம் வழங்கப்படும். இவை மத்திய அரசு விதிமுறைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதிய அளவுகளாகும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், https://siddhacouncil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் "The Director General, Central Council for Research in Siddha, Ministry of Ayush, GST Road, Tambaram Sanatorium, Chennai - 600047" என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.03.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைமுறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை இணையதளத்தில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: மெகா வேலைவாய்ப்பு.. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 25,487 காலிப்பணியிடங்கள்.. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.!