மாணவர்களே... CBSE 12-ஆம் வகுப்பு ரிசல்ட் வந்தாச்சு..! இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் என்ன தெரியுமா..?
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 85.20% ஆக பதிவாகியுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைனில் மதிப்பெண்களை பார்க்கலாம்.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிடும் CBSE 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. நாடு முழுவதும் மாணவர்கள் எதிர்பார்த்திருந்த இந்த முடிவில், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 85.20 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேர்ச்சி விகிதம் 3.19 சதவீதம் குறைந்திருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற்றன. இந்த ஆண்டு சுமார் 18.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். அதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவிகளும் பங்கேற்றதாக வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.... தேர்வு முடிவுகள் இந்த இணையதளத்தில் வெளியானது! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
இணையதளத்தில் மதிப்பெண் பார்க்க வசதி
மாணவர்கள் தங்களது பதிவு எண், பள்ளி குறியீடு மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி cbseresults.nic.in மற்றும் cbse.gov.in இணையதளங்களில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். அதேபோல் DigiLocker மற்றும் UMANG செயலிகள் மூலமாகவும் டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்எம்எஸ் மூலமும் தகவல்
இணையதள சேவைக்கு மாற்றாக எஸ்எம்எஸ் மற்றும் தொலைபேசி அழைப்பு வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முடிவுகள் வெளியான சில நிமிடங்களிலேயே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணையதளங்களில் அதிக அளவில் உள்நுழைந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.
உயர்கல்வி சேர்க்கை பணிகள் தீவிரம்
தமிழக மாநில பாடத்திட்டத்தின் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே மார்ச் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ முடிவுகளும் வெளியாகியுள்ளதால் உயர்கல்வி சேர்க்கை நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளன. குறிப்பாக பொறியியல், மருத்துவம் மற்றும் மத்திய பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பப் பணிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன.
இதையும் படிங்க: BREAKING! மாணவர்களே.... பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே-8 ஆம் தேதி வெளியாகாது! அதிரடி காரணத்தால் கல்விவித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!