×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அமைச்சர் விஜயபாஸ்கரின் அருமையான யோசனை! புதுக்கோட்டையில் மரக்கன்றுகளுடன் குவிந்த குவிந்த பொதுமக்கள்!

cauvery gundar link project

Advertisement

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை இந்த ஆண்டு தமிழ்நாடு முதல்வர் அடிக்கல் நாட்டி வைக்க உள்ளார் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். 

காவிரி, கொள்ளிடம், வைகை, குண்டாறு, அக்னியாறு ஆகிய நதிகளை இணைக்கும் இந்தத் திட்டத்திற்காக 7677 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 118 கிலோமீட்டர் தூரம் கால்வாய் அமைக்கப்பட்டு வினாடிக்கு 6360 கன அடி காவிரி நீர் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரவுள்ளது.

.
குறிப்பாக இந்தக் கால்வாய் புதுக்கோட்டையில் மட்டும் 58 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது புதுக்கோட்டையின் வறண்ட இடங்களில் எல்லாம் காவிரி நீர் பாயும் என்பதால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டை டவுன்ஹாலில் இந்தத் திட்டத்தின் முதல் கட்டத் துவக்கவிழா நடைபெறுகிறது. அந்த விழாவிற்கு வரும்போது நிர்வாகிகள், கட்சியைச் சேர்ந்தவர்கள் சால்வைக்குப் பதிலாக மரக்கன்றுகள், பனை விதைகள் போன்றவை வழங்க வேண்டும் என மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தநிலையில் கட்சியைச் சேர்ந்தவர்கள் பச்சை துண்டை கழுத்தில் அணிந்தபடி, மரக்கன்று, விதைகளுடன் புதுக்கோட்டை நோக்கி வந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vijayabaskar #Admk #river project
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story