×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல தமிழ் பெண் செய்தி வாசிப்பாளர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.! என்ன காரணம்.?

பிரபல தமிழ் பெண் செய்தி வாசிப்பாளர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.! என்ன காரணம்.?

Advertisement

பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும், பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினருமான சவுதா மணி மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதக்கலவரத்தை தூண்டும் விதமாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டதாக சவுதா மணி மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதத்தின் பெயரில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ, பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்த்துறை எச்சரித்திருந்தது. 

இந்தநிலையில், மதம் தொடர்பில் நபர் ஒருவர் சர்ச்சையான வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை தனது சமூகவலைதள பக்கத்தில் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி பதிவிட்டு "தைரியமா? விடியலுக்கா?" என கேள்வி எழுப்பி திமுக அரசை சாடி இருந்தார்.

இதனையடுத்து சவுதா மணி மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sowtha mani #case
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story