தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய சாப்ட்வேர் என்ஜினீயர்! தண்ணீர் லாரி மீது கார் மோதி பரிதாப மரணம்!

car accident in pallikaranai

car-accident-in-pallikaranai Advertisement


சென்னை, குரோம்பேட்டை லட்சுமிபுரம் தெருவைச் சேர்ந்த சார்லஸ் ஆண்டனிராஜ் என்பவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்துள்ளார். இவருடன் சிட்லபாக்கம் அண்ணாநகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரும் பணியாற்றி வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தில் இருந்து இருவரும் ஒரே காரில் வீட்டுக்கு புறப்பட்டனர். இவர்களுடன் திருநீர்மலையை சேர்ந்த மற்றொரு நபரும் காரில் சென்றுள்ளார். இவர்கள் துரைப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி மெயின் ரோடு வழியாக பள்ளிக்கரணை அருகே வந்தபோது, திடீரென சாலையோரம் நின்றுகொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதியது.

car accident

கார் வேகமாக மோதியதில் காரில் பயணித்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில்  சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சார்லஸ் ஆண்டனி ராஜ் இறந்தார்.

மேலும், காயமடைந்த மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#car accident #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story