×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீர் உடல்நல குறைவு!! கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!!

உடல்நல குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் நேற்று இரவு சென்னையில் உள்ள மியாட்

Advertisement

உடல்நல குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் நேற்று இரவு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சினிமாவில் இருந்து ஒதுங்கிய நடிகர் விஜயகாந்த் முழுநேர அரசியலில் களமிறங்கினார். தேமுதிக கட்சியை தொடங்கி, அதன் தலைவராக பொறுப்பேற்று கட்சியை திறம்பட நடத்திவந்த அவர், உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்தார்.

மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சென்றுவந்த விஜயகாந்த் தற்போதுவரை உடல்நல குறைவினால் அவதிப்பட்டுதான் வருகிறார். அவ்வப்போது மருத்துவமனையில் சென்று உடல் நல பரிசோதனை செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென விஜயகாந்த் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijayakanth
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story