×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உயிர் கொடுத்த அக்காவுக்கு சொத்தை எழுதி வைத்த தம்பி.. கணவன், தாய்க்கு ஸ்கெட்ச் போட்ட பாசக்கார பெண்? தர்மபுரியில் இரட்டைக்கொலை திடுக்.!

Dharmapuri News: அக்கா, தம்பி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேரிடம் விசாரணை நடக்கிறது.

Advertisement

சொத்துக்காக அக்கா, தம்பி கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் தர்மபுரி காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

குடும்பம்:

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏ. ஜெட்டிஅள்ளி ஊராட்சி, தகடூர் கிராமத்தில் வசித்து வருபவர் மாதேஷ் (வயது 45). இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நாகம்மாள் (வயது 50), நஞ்சம்மாள் (வயது 47) என இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். நாகம்மாள் மகள் கீதாவை (வயது 39) மாதேஷ் திருமணம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: கள்ளக்காதல் ரகசியம் வெளிவந்ததால் ஆத்திரம்.. கணவரை ஸ்கெட்ச் போட்டு கொன்ற மனைவி.!

மனைவி, குடும்பச்சண்டை:

தம்பதிகளுக்கு மகன், மகள் இருக்கின்றனர். இதனிடையே, நஞ்சம்மாள் கணவரை கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மாதேஷின் மனைவி கீதா கணவருடன் சண்டையிட்டு தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் மாதேஷ் மதுபோதைக்கு அடிமையாகி இருக்கிறார். தினமும் மதுபானம் குடித்து வந்துள்ளார்.

உயிர்கொடுத்த அக்கா:

குடும்பத்திலும் நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததால், மதுப்பழக்கம் அதிகமாகி இருக்கிறார். இதனால் மாதேஷுக்கு உடல்நலம் குன்றி இருக்கிறது. இதனால் நஞ்சம்மாள் தன்னிடம் இருந்த பணத்தை செலவு செய்து மாதேஷை காப்பாற்றி இருக்கிறார். இதனால் மாதேஷ் 10 சென்ட் நிலத்தை அக்கா நஞ்சம்மாளின் பெயருக்கு மாற்றி எழுதி கொடுத்துள்ளார்.

இரட்டைக்கொலை:

இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கீதா, அக்கா நாகம்மாள் ஆகியோர் மாதேஷுடன் தகராறு செய்து வந்துள்ளனர். இதனிடையே, சம்பவத்தன்று நஞ்சம்மாள் தங்கியிருந்த வீட்டின் வெளியே மாதேஷ், நஞ்சம்மாள் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த அத்தியமான்கோட்டை காவல்துறை அதிகாரிகள் கீதா, நாகம்மாள் உட்பட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சொத்து பிரச்சனையில் கொலை நடந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க: என் மேல சந்தேகமா? தலைநசுங்கி உயிரிழந்த கணவன்.. மனைவி செய்த வெறித்தன சம்பவம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Dharmapuri #Land Dispute #சொத்து கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story