×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பல முறை கண்டித்தும் காதலை கைவிட மறுத்த தங்கையின் காதலனை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்.!

பல முறை கண்டித்தும் காதலை கைவிட மறுத்த தங்கையின் காதலனை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்.!

Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி முரளி என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் சகோதரர்  சந்தோஷ் தன் தங்கையிடம் முரளியுடன் உள்ள காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். மேலும் சந்தோஷ் முரளியிடமும் தன் தங்கையோடு பேசி பழகுவதை நிறுத்துமாறு கண்டித்துள்ளார்.

ஆனால் சிறுமியும் முரளியும் இதனை சற்றும் பொருட்படுத்தாமல் பழகி வந்துள்ளனர். இதனையடுத்து சிறுமி முரளியை திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டிலிருந்து வெளியேரியுள்ளார். இதனால் சிறுமியின் தந்தை அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் முரளி மற்றும் சிறுமியை காவல்துறையினர் கண்டுபிடித்து சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் முரளியிடம் அந்த சிறுமிக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்று கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். 

இதன் பிறகும் முரளி அந்த சிறுமியிடம் தொடர்ந்து பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் சகோதரர் சந்தோஷ் முரளியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பலூர் காவல் துறையினர் முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தங்கையின் காதலனை சகோதரர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #Aquest arrested #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story