×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவனை பிடிக்காமல் தாய்வீட்டிற்கு வந்த இளம்பெண்!! அக்கா என்று கூட பாராமல் அதிகாலையில் சரம்வாரியாக வெட்டிய தம்பி!

brother murdered his sister

Advertisement


நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையை சார்ந்தவர் மணிவண்ணன். பொறியியல் படித்த மகளும், பாலிடெக்னிக் படிக்கும் மகனும் இருந்துள்ளனர். மணிவண்ணனின் மகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஏர்வாடி பகுதியை சார்ந்த லெனின் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில், திருமணம் நடந்து முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே கணவர் பிடிக்கவில்லை என்று தந்தை வீட்டிற்கு திருப்பியுள்ளார்  மணிவண்ணனின் மகள். அவர் வீட்டுக்கு வந்த மறுதினம் அதிகாலை இரண்டு மணியளவில் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த  மணிவண்ணனின் மகளை அவரது சகோதரன் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளான். 

கொலைசெய்துவிட்டு மணிவண்ணனின் மகன் சுந்தரபாண்டியன் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். காவல்நிலையத்திற்கு அரிவாளுடன் வந்த சுந்தரபாண்டியை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர். மேலும் அவரிடம் இருந்த அரிவாளை கைப்பற்றி பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

போலீசார் நடத்திய விசாரணையில், தனது அக்காவிற்கு கடந்த மாதம் தான் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. அவரின் கணவரான லெனின் லாரி ஓட்டுநர் என்பதை அறிந்தே திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறினார். மீண்டும் அவரிடம் பேசி கணவருடன் சேர்த்து வைத்த 10 நாட்களில் மீண்டும் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று வீட்டிற்கு வந்துவிட்டார். 

எனது அக்கா அவரு செய்ததால் எண்களாக குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய முடிவு செய்து அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சுந்தர பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sister and brother #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story