திருமணம் நடந்த அடுத்த நிமிடமே தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணன்! அதிர்ச்சி காரணம்!
brother killed his younger brother
மேட்டுப்பாளையத்தில் பட்டியிலின சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால், உடன் பிறந்த சகோதரனை அவரது அண்ணன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த பட்டியிலின சமூகத்தை சேர்ந்த பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கனகராஜின் அண்ணன் வினோத் புதுமணத்தம்பதிகள் இருக்கும் வீட்டிற்கு சென்று இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். அந்தக் கொடூரத் தாக்குதலில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை மணந்து கொண்ட பிரியாவும் காயமடைந்துள்ளார்.
மணமகனின் சகோதரரே இந்த கொலையில் ஈடுபட்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தநிலையில் கனகராஜின் அண்ணன் வினோத்குமார் இன்று காலை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.