தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவன் இருந்தும் பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு..! சொந்த தங்கையை கொலை செய்த அண்ணன்.!

Brother killed his sister who have illegal relationship near madurai

Brother killed his sister who have illegal relationship near madurai Advertisement

கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த தங்கை வேறு சில ஆண்களுடன் கள்ள உறவு வைத்திருப்பதை அறிந்த அண்ணன், தனது சொந்த தங்கையை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சென்னகரம்பட்டி பகுதியை சேர்ந்த சகுந்தலாதேவி என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்திவந்ததில் சொந்த அண்ணனே தங்கையை கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Crime

இதுகுறித்து கொலையாளி சவ்ந்தரபாண்டியன் கொடுத்த வாக்குமூலத்தில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தனது தங்கை அவரது இரண்டு குழந்தைகளுடன் 5 வருடங்களுக்கு முன் தங்கள் வீட்டிற்கு வந்ததாகவும், இதனிடையே தனது தங்கைக்கு இங்கிருக்கும் சில ஆண்களுடன் கள்ள தொடர்பு இருப்பதாகவும், நான் அவரை பலமுறை கண்டித்தும் அவர் கேட்காததால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் குடும்ப மானம் போய்விடும் என்பதற்காக அவரை கொலை செய்ததாக சவ்ந்தரபாண்டியன் கூறியுள்ளார்.

கள்ள தொடர்பில் இருந்த தங்கையை சொந்த அண்ணனே கொலை செய்திருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #illegal relationship
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story