தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலியை பழிவாங்க ஆபாச புகைப்படத்தை பதிவேற்றிய காதலன் கைது!

காதலியை பழிவாங்க ஆபாச புகைப்படத்தை பதிவேற்றிய காதலன் கைது!

Boy upload lover half nude images Advertisement

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் யாரோ ஒருவர் தன்னுடைய வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை ஹேக் செய்து தனது ஆபாச புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி அவமானப்படுத்தியுள்ளார்.

அந்த நபர் யார் என்று தெரியவில்லை. எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகரத்திற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் இளம் பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐடிஐ வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

chennai

அந்த விசாரணையில் ஆழ்வார் திருநகர் சாதிக் பாஷா தெருவை சேர்ந்த தமிம் அன்சாரி என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் தமீம் அன்சாரியும், அந்த இளம் பெண் இருவரும் காதலித்து வந்ததும், இருவரும் பல்வேறு எங்களுக்கு சென்று பழகி வந்ததும் தெரிய வந்தது.

ஆனால் அதன் பிறகு தமீம் அன்சாரியின் நடவடிக்கை பிடிக்காததால் அந்தப் பெண் அவரை விட்டு விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தமீம் அன்சாரி தனது காதலியை பழிவாங்க வேண்டும் என்று தனது காதலியின் ஆபாச புகைப்படங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பியதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து தமீம் அன்சாரி மீது சைபர் கிரைம் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Love problem #Crime #police #arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story