×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"என் குடும்பமே உன்னால தான் நாசமா போச்சு..." காதலில் விழுந்த ஏட்டு.!! கள்ளக்காதலியை கொன்ற 16 வயது மகன்.!!

என் குடும்பமே உன்னால தான் நாசமா போச்சு... காதலில் விழுந்த ஏட்டு.!! கள்ளக்காதலியை கொன்ற 16 வயது மகன்.!!

Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் தலைமை காவலருடன் கள்ளத்தொடர்பிலிருந்த பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 16 வயது சிறுவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வரும் நபருக்கு திருமணமாகி ஒரு மகளும் 16 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் போலீஸ்காரருக்கு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவரது உறவுக்கார பெண்ணான சக்தி மகேஸ்வரி என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. தனது குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் அடிக்கடி சக்தி மகேஸ்வரியை சந்தித்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார் போலீஸ்காரர்.

இதனால் போலீசுக்கும் அவரது மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தனது கணவனை வெறுத்து ஒதுக்கிய போலீஸ்காரரின் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் 2 குழந்தைகளும் போலீஸ்காரரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இந்நிலையிலும் தனது கள்ளக்காதலியே கதி எனக்கிடந்த போலீஸ்காரர், தனது குழந்தைகளையும் சரியாக பராமரிக்காமல் இருந்து வந்திருக்கிறார். இது அவரது 16 வயது மகனுக்கு ஆத்திரத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: போதை வெறியில் மகன் படுகொலை.!! தந்தை சரண்.!!

தனது குடும்பம் பிரிந்து சென்றதற்கு சக்தி மகேஸ்வரி தான் காரணம் எனக் கருதிய 16 வயது சிறுவன் தன்னுடன் பள்ளியில் படிக்கும் சக நண்பனுடன் சேர்ந்து அவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியிருக்கிறார். இதன்படி நேற்று மதியம் நண்பனுடன் சக்தி மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்ற 16 வயது சிறுவன் அவரை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார். இதன் பிறகு 2 சிறுவர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொலை சம்பவம் பற்றி தகவலறிந்த காவல்துறையினர் சக்தி மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறுவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தந்தையுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணை 16 வயது மகன் படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "நட்பின் துரோகம்..." நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு.!! பொக்லைன் ஆபரேட்டர் கொடூர கொலை.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Tuticorin #Crime #Murder #Minor Accused #ema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story