எஸ்கலேட்டரில் சிக்கிய தலை..! துடி துடித்த சிறுவன்! பதறிய தாய்! துணி கடையில் நடந்த விபரீதம்!
Boy head struck in escalator at sarvana stores pursaiwalkam

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் துணி கடையில் சிறுவன் ஒருவனின் தலை எஸ்கலேட்டரில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கன்னிகாபுரத்தை சேர்ந்த சசிகலா என்பவர் தனது மகன் ரனீஷ் பாபுவுடன் பொங்கலுக்கு துணி எடுக்க சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் துணி கடைக்கு சென்றுள்ளார். கடைக்கு சென்ற அவர் துணி எடுப்பதற்காக 8 வது தளத்திற்கு தனது மகனுடன் நகரும் ஏணி (எஸ்கலேட்டரில்) சென்றுள்ளார்.
இந்நிலையில் எஸ்கலேட்டரில் தலையை சாய்த்து வைத்தவாறு கீழ்தளத்தை பார்த்துக்கொண்டு ரனீஷ் பாபு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுவனின் தலை எஸ்கலேட்டரில் சிக்கிக்கொண்டது. உடனே, கடை ஊழியர்கள் எஸ்கலேட்டரின் மின்னிணைப்பை துண்டித்தனர். இதனை அடுத்து சிறுவனின் தலை எஸ்கலேட்டரில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டது.
ஆனால், சிறுவனின் தலையில் சிறு காயம் இருந்ததால் அருகில் இருந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தாய் சசிகலா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். CCTV காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சிறுவனின் தலை எஸ்கலேட்டரில் சிக்கிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.