காதலித்த பெண்ணை கைபிடிக்க நினைத்த காதலன்; நேர்ந்த விபரீதம் என்ன?.. கண்ணை கலங்கவைக்கும் சோகம்..!
காதலித்த பெண்ணை கைபிடிக்க நினைத்த காதலன்; சேர்ந்த விபரீதம் என்ன...?
காதலித்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ள சம்மதித்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அம்மையன் பட்டி கிராமத்தை சேர்ந்த மும்மூர்த்தி என்பவரது மகன் கார்த்திக் (25), இவர் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் கரூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கம்பெனியில் மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கார்த்திக் சிவகங்கையை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார் இவர்களுடைய காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிந்தால் அவர்கள் அந்தப் பெண்ணிற்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.இது தெரிந்தவுடன் கார்த்திக் மிகவும் மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு தான் காதலித்த பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கார்த்திக் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அந்தப் பெண்ணிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண் அவருடைய பெற்றோருக்கு பயந்து திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் விரக்தி அடைந்த கார்த்திக் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக்கண்ட அவருடன் வேலை பார்த்து வரும் அவருடைய நண்பர்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கார்த்திக் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பெருந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.