ஊஞ்சலில் விளையாடிய குழந்தை ! மாலை வீடு திரும்பிய மகள் பார்த்த அதிர்ச்சி! பதறவைக்கும் சம்பவம்..
ஊஞ்சலில் விளையாடிய குழந்தை ! மாலை வீடு திரும்பிய மகள் பார்த்த அதிர்ச்சி! பதறவைக்கும் சம்பவம்..
திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிதாசன் மற்றும் தனலட்சுமி என்பவர்கள் கட்டிட வேலை செய்து வருகின்ற தம்பதியினர். இவர்களுக்குத் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
அவர்களில் மூத்த மகன் சஷ்டிதரன் (வயது 13), உள்ளூர் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தார். பெற்றோர் வேலைக்குச் சென்றபோது, அவர் சேலையால் செய்யப்பட்ட தொட்டிலில் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது சேலை தவறுதலாக கழுத்தில் சுற்றி, அதன் பிடியில் சிக்கியதால் சஷ்டிதரன் சுயமாக அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்துள்ளார். சேலை கழுத்தை தொடர்ந்து இறுக்கியதால் சிறுவன் தொட்டிலிலேயே தொங்கியபடி கிடந்துள்ளார். மாலை பள்ளி முடிந்து திரும்பிய மகள் தம்பி தொட்டிலில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து பதறியடித்து அருகில் உள்ளவர்களிடம் ஓடிச் சென்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
உடனே அவரது தாய், தந்தைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தொட்டிலில் தொங்கிய சிறுவனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுபற்றிய தகவலைப் பெற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மரணச் சம்பவம், அப்பகுதி மக்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை!! தென்றலுடன் உருவான வானிலையால் லேசாக குளிர்ந்த சென்னை!