×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நான் கேட்கும் போதெல்லாம் தரணும்..! ஆபாச மார்பிங் புகைப்படங்களை வைத்து இளம் பெண்களை டார்கெட் செய்த வாலிபர்..!

Boy arrested who black mail girl using morphing photos

Advertisement

பெண்களின் புகைப்படங்களை ஆபாச புகைப்படங்களுடன் மார்பிங் செய்து, பெண்களை மிரட்டி பணம் கேட்ட 19 வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொழில்நுட்பம், இணையதளம், சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி பலவிதங்களில் நன்மையாக இருந்தாலும், அதன்மூலம் நடக்கும் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக இளம் பெண்களின் வீடியோ, புகைப்படங்களை வைத்து பாலியல் தொல்லை கொடுப்பது, மிரட்டி பணம் வாங்குவதுபோன்ற செயல்கள் தற்போது பெருகி வருகிறது.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த நபர் ஒருவர் ராமந்தபுரம் எஸ்பி வருண் குமாருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த புகாரில், தனது மனைவியின் சில புகைப்படங்களை மற்ற பெண்களின் ஆபாச புகைப்படங்களுடன் இணைத்து முக நூலில் ஒருவர் பதிவிட்டுள்ளதாகவும், இந்த புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பரப்பாமல் இருக்க 20 ஆயிரம் பணம் தரும்படி கேட்டு மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.

உடனே அதிரடி நடிவடிக்கையில் இறங்கிய அருண் குமார் சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் பிரமக்குடியை அடுத்த உலகநாதபுரம் பகுதியை சேர்ந்த ரோஹித் (19) என்ற இளைஞரை கைது செய்தனர்.

ரோஹித் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்துவருவதும், பல பெண்களின் புகைப்படங்களை இதுபோன்று மார்பிங் செய்து பணம் பறித்துவந்ததும், அந்த புகைப்படங்களை குறிப்பிட்ட பெண்களின் உறவினர்களுக்கு அனுப்பி பணம் கேட்டுவந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கேட்கும்போதெல்லாம் பணம் தராவிட்டால் புகைப்படத்தை இணையத்தில் பரப்பிவிடுவேன் என கூறி மிரட்டுவதையே வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல், ரோஹித்தின் செல்போனை ஆய்வு செய்ததில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள், விடீயோக்கள் இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.

இதனை அடுத்து ரோஹித்தை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இதுபோன்று பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் ராமநாதபுரம் எஸ்பி அருண் குமாருக்கு 9489919722 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும், புகார் தெரிவிப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் ராமநாதபுரம் எஸ்பி தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Cyber crime #Morphing photos
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story