×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய்க்கு அழைப்பு விடுத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. தமிழக பாஜக தலைமை கெடுபிடி.!

விஜய் கூட்டணியில் சேர வேண்டும் என்ற அறிக்கைக்கு பின்னர் பாஜக பிரமுகரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

TVK Vijay BJP: விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மறைமுக பேச்சுவார்த்தை?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் கூட்டணி தொடர்பான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செங்கல்பட்டு மற்றும் மதுரை பொதுக்கூட்டங்களைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பொதுக்கூட்டம் மார்ச் 11ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ளது. இந்த சூழலில் நடிகர் விஜயை NDA கூட்டணியில் இணைக்க பாஜக தரப்பில் இருந்து முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வழியாக விஜயுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை, சிபிஐ விசாரணைக்காக விஜயை டெல்லிக்கு அழைத்திருந்தபோதிலும், தேர்தல் பணிகளை காரணம் காட்டி அவர் செல்லவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: விஜய் மட்டும் இதை செய்தால் திமுகவின் தோல்வி உறுதி!! எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்..

கண்டுகொள்ளாத விஜய்:

இதற்கு முன்பாக திமுகவை எதிர்க்கும் அரசியல் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கில் அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து விஜய்க்கு தொடர்ந்து கூட்டணிக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டன. அதிமுக - பாஜக கூட்டணி உருவாகும் முன்பே அதிமுக தரப்பில் விஜயுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் “முதல்வர் வேட்பாளர் விஜய்” என்ற நிலைப்பாட்டில் தவெக உறுதியாக இருந்ததால் அந்த கூட்டணி இறுதியாக அமையவில்லை என்ற தகவல்கள் வெளியானது. அதிமுக - பாஜக கூட்டணி உருவான பின்னரும் விஜய்க்கு அக்கட்சிகளின் தரப்பில் இருந்து வெளிப்படையான அழைப்புகள் விடுக்கப்பட்டன. இருப்பினும், அவற்றிற்கு விஜய் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

பாஜக மாநில பிரமுகர் அறிக்கை:

இந்த நிலையில், பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் நேற்று வெளியிட்ட அறிக்கையில், திமுகவை எதிர்க்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் திமுக ஆட்சியை எதிர்க்க உண்மையாக விரும்பினால் நடிகர் விஜய் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பகுதியாக வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

பதவி பறிப்பு:

இந்நிலையில், இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிவிப்பில், மாநில செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து ஏ.என்.எஸ். பிரசாத் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவர் வகித்து வந்த ஊடகத்துறை பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து அந்த அறிவிப்பில் எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க: கெத்து காட்டும் ஸ்டாலின்! திமுக கூட்டணியில் ஒரே நேரத்தில் இணையும் இரண்டு கட்சிகள்.....! சூடுபிடிக்கும் அரசியல் களம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பாஜக #ஏஎன்எஸ் பிரசாத் #NDA Alliance #தவெக #நயினார் நாகேந்திரன் #bjp
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story