×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேகமாக வந்த பைக்.. போக்குவரத்து போலீசார் மீது மோதி விபத்து.. வைரல் வீடியோ காட்சி..

சாலையை கடக்க முயன்ற போக்குவரத்துக்கு போலீசார் மீது பைக்கில் வந்த வாலிபர்கள் மோதி போலீசார் ஒருவர் கீழே விழும் வீடியோ காட்சி தற்போது வைரலாகிவருகிறது.

Advertisement

சாலையை கடக்க முயன்ற போக்குவரத்துக்கு போலீசார் மீது பைக்கில் வந்த வாலிபர்கள் மோதி போலீசார் ஒருவர் கீழே விழும் வீடியோ காட்சி தற்போது வைரலாகிவருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் என்ற பகுதியில் போக்குவரத்துக்கு போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சாலையின் ஒருபுறம் இருந்து மறுபுறம் போலீசார் இருவர் கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனம் ஒன்றில் வந்த மூன்று இளைஞர்கள் சாலையை கடக்க முயன்ற உதவி ஆய்வாளர் குருநாதன் என்பவர் மீது பலமாக மோதியுள்ளனர்.

இந்த விபத்தில் உதவி ஆய்வாளர் குருநாதன் நிலைதடுமாறி கீழே விழுகிறார். இதனை அடுத்து அந்த மூன்று இளைஞர்களும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 3 இளைஞர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தநிலையில் தற்போது அந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Credits: Polimernews.com

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #cctv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story