×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING: திமுகவில் இணையும் முக்கிய பிரபலம்! ஸ்டாலின் வைத்த செக்... இனி அதிரும் அரசியல் களம்..!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் குரலால் பிரபலமான சாஷோ திமுகவுடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இளைஞர்களை மையமாகக் கொண்ட அரசியல் வியூகங்களில் அவர் முக்கிய பங்காற்றலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

Advertisement

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியின் கம்பீரக் குரலால் அறியப்படும் டப்பிங் கலைஞரும், நடிகரும், லைஃப்ஸ்டைல் கன்சல்டன்ட்டுமான சாஷோ என்ற சதீஷ் சாரதி, திமுக தலைமையுடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான தகவல் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்களை மையமாகக் கொண்ட புதிய வியூகம்?

தமிழக அரசியலில் அண்மைக்காலமாக தமிழக வெற்றிக் கழகம் இளைஞர்களை, குறிப்பாக ‘Gen Z’ தலைமுறையை குறிவைத்து அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திடீர் திருப்பம்! கச்சிதமாக காய் நகர்த்தும் முஸ்லிம் லீக் கட்சி! விஜய்யின் தவெக உடன் ரகசிய டீல்? அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!

ஆலோசகராக நியமிக்க திட்டமா?

தகவலின்படி, இளைஞர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்ற அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் தகவல் பரிமாற்ற உத்திகளை வடிவமைப்பதில் அனுபவம் பெற்ற சாஷோவை, திமுகவின் புதிய ஆலோசகராக நியமிக்க கட்சித் தலைமை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் அவருக்குள்ள வரவேற்பும், இளைஞர்களை ஈர்க்கும் பேச்சுத் திறனும் இந்த முடிவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

தேர்தல் வியூகத்தில் புதிய அணுகுமுறை

வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களின் ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் இந்த திமுக வியூகம் அமைந்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், சாஷோவின் நியமனம் தொடர்பாக திமுக தலைமையோ அல்லது சாஷோவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

 

இதையும் படிங்க: சற்றுமுன்... MLA பதவியை ராஜினாமா செய்தார்....! தவெக காட்டும் தயக்கத்தால் பெரும் பரபரப்பு!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bigg boss #sasho #dmk #Gen Z #Political Strategy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story