×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழக முதல்வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கிறாரா..? ஆஹா.. மிக்க மகிழ்ச்சி.. நடிகர் கமல் போட்ட ட்விட் பதிவு..

தமிழக முதல்வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பது மகிழ்ச்சியளிப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழக முதல்வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பது மகிழ்ச்சியளிப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுகவை கடுமையாக சாடினார். அதுமட்டும் இல்லாமல் அவ்வப்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

இந்நிலையில் கமலின் பேச்சுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் கமல் தொகுத்துவழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்தார். 70 வயதில் பிக்பாஸ் நடத்திக்கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? இந்த நிகழ்ச்சியை பார்த்தல் ஊரில் உள்ள ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது என முதல்வர் பேசியிருந்தார்.

அதுமட்டும் இல்லாமல் அந்த டிவி தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டுவிடும், நன்றாக உள்ள குடும்பமும் கெட்டுவிடும் எனவும் அவரெல்லாம் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும் கமல் நடிக்கும் படங்களின் கருத்துகளையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் முதல்வர்.

இந்நிலையில் முதல்வரின் இந்த பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக, "முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது" என நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamal #Bigg boss
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story