×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீடு வீடாக சென்று யாசகம் பெற்ற பணத்தை இந்த முதியவர் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! குவியும் வாழ்த்துக்கள்!

Begger Old man donate that money for corono refund

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் என 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் அவரது மனைவி இறந்தபிறகு வீட்டைவிட்டு வெளியேறிய அவர் பொதுசேவை செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்ற 
அவர் யாசகம் பெற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து உதவி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பூல்பாண்டியன் மதுரைக்கு வந்துள்ளார். அப்பொழுது கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,  அவர் அரசு பள்ளி ஒன்றில் தங்கி,  மதுரையிலுள்ள பல பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்றுள்ளார்.
பின்னர் அதன் மூலம் கிடைத்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கடந்த மே மாதம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார். 

அதனை தொடர்ந்தும் அவ்வாறே அவர் நான்கு முறை ரூ.10000 என மொத்தம் 50 ஆயிரம் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். இவர் ஏற்கனவே இவ்வாறு புயல் நிவாரண நிதி போன்ற பல உதவிகளை செய்துள்ளார். 

மேலும் அவர்  இந்த ஆண்டு முழுவதும் இவ்வாறு வசூல் செய்து  தொடர்ந்து கொரோனா நிவாரண நிதி அளிப்பேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பூல்பாண்டியனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono #Refund #begging
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story