×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாகன ஓட்டிகளே ஜாக்கிரதை.. தலைக்கவசம் உயிர்க்கவசம் அதற்கு சிறந்த உதாரணம் இந்த விபத்து.. !

வாகன ஓட்டிகளே ஜாக்கிரதை.. தலைக்கவசம் உயிர்க்கவசம் அதற்கு சிறந்த உதாரணம் இந்த விபத்து.. !

Advertisement

தலைக்கவசம் உயிர்க்கவசம் என தொடர்ந்து போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றனர். ஆனால் இதை அலட்சியமாக எடுத்துகொண்டு பலரும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்துக்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கின்றது. 

ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம்  அன்னியாளத்தை சேர்ந்தவர்கள் வரதப்பா மகன் திலீப் மற்றும் மாதேஷ் மகன் சுனில். இந்நிலையில் வெளியில் சென்றிருந்த இருவரும் இரு சக்கர வாகனத்தில் தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மதகொண்டப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது இவர்களது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதியுள்ளது. இதில் திலீப் மற்றும் சுனில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

இதனையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றதால் தான் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துள்ளாரகள் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #died #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story