×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆசையாக சாப்பிட சென்ற நபருக்கு பிரியாணிக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி.! முகம்சுளித்துபோன இளைஞன்!!

bantage inside in briyaani at famous hotel

Advertisement

கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானம் அருகே பிரியாணிக்கு பெயர் போன பிரபல கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் ஈரோட்டில் வசித்து வரும் கவின் குமார் என்பவர் தனது நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட சென்றுள்ளார். அதனை தொடர்ந்து அவர்கள் பிரியாணி ஆர்டர் செய்த நிலையில், சூடாக பரிமாறபட்ட பிரியாணியை மிகவும் ஆர்வத்துடன் தனது நண்பர்களுடன் கவின் சாப்பிட்டுள்ளார். 

இவ்வாறு  பாதி பிரியாணி  சாப்பிட்டு முடித்த நிலையில், பிரியாணிக்குள்  ரத்தக்கறையுடன் பேண்டேஜ் ஒன்று கிடந்துள்ளது. அதனை கண்டு முகம் சுழித்த கவின்குமார். இதுகுறித்து கடை ஊழியர்களிடம் குற்றச்சாட்டு அளித்து விளக்கம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் அதற்கு எந்த சரியான பதிலையும் கொடுக்காத நிலையில் ஆத்திரமடைந்த கவின்குமார் இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தார். 

அதனை தொடர்ந்து அங்கு விரைந்த அதிகாரிகள் கடை ஊழியர்களிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அதிகாரிகளுக்கும் அவர்கள் உரிய பதிலளிக்காத நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thalapakkti priyani #blood bantage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story