×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

100 நாட்களாக சிறையில் வாடிவந்த ப.சிதம்பரத்திற்கு, இன்று கிடைத்த சந்தோசம்!

Bail for p.chidambaram

Advertisement

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிக்கி, கடந்த ஆகஸ்டு மாதம் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 

இதனையடுத்து சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம்  கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என கூறி டெல்லி உயர்நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

 இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த வியாழக்கிழமை விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதனை விசாரித்து சிதம்பரத்துக்கு இன்று ஜாமீன் வழங்கியது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இரண்டின் வழக்கிலுமே அவருக்குப் பிணை இருப்பதால் 100 நாள்களைக் கடந்து சிறையில் இருக்கும் சிதம்பரம் தற்போது சிறையில் இருந்து வெளியே வருகிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#P chidambaram #bail
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story