×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடன் சுமை அதிகமானதால் கணவர் எடுத்த விபரீத முடிவு.. கதறும் 3 மாத கர்ப்பிணி மனைவி.!

கடன் சுமை அதிகமானதால் கணவர் எடுத்த விபரீத முடிவு.. கதறும் 3 மாத கர்ப்பிணி மனைவி.!

Advertisement

தக்கலை அருகே மருதூர்குறிச்சி வாகைகுளம் பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருபவர் விமல் சிங். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அனிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் சமீபத்தில் அவர் சொந்த வீடு ஒன்றை கட்டி உள்ளார். இதற்காக விமல் சிங் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் கடன் வாங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதனால் இவருக்கு கடன் சுமை அதிகமாகியுள்ளது.

தினசரி வேலைக்கு சென்றும் கடனை திருப்பி செலுத்த முடியாமல் இருந்ததால் விமல் சிங் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் விமல் சிங் குடி பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இந்நிலையில் இவரது மனைவி 3மாத கர்ப்பமாக இருப்பதால் அவருடைய மருத்துவ செலவு அவருக்கு மேலும் பண நெருக்கடியை கொடுத்துள்ளது. 

இதனால் சம்பவத்தன்று அவர் மதியம் சாப்பிட்டு விட்டு அவரது அறைக்கு சென்று உள்தாழ்ப்பாள் போட்டுள்ளார். இதனைதொடர்ந்து மாலை நீண்ட நேரமாகியும் விமல் சிங் கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விமல் சிங்கின் மனைவி கதவை நீண்ட நேரம் தாட்டியுள்ளார். ஆனால் எந்த சத்தமும் கேட்காமல் இருந்ததால் பதறிப்போய் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது விமல் சிங் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து சடலமாக தொங்கியுள்ளார். இதை பார்த்த விமல் சிங்கின் மனைவி மற்றும் உறவினர்கள் கதறி துடித்துள்ளனர். பின் தகவலறிந்து அங்கு வந்த தக்கலை காவல் துறையினர் விமல் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Debt load #Sucide #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story